நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

அரியலூர், மார்ச் 8: அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்தில் வேளாண்மைத் துறை தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் கரும்புசாகுபடிசெய்யும் முன்னோடி விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடிதொழில் நுட்பம் குறித்த பயிற்சி

நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் (பொ) பழனிசாமி தலைமை வகித்து கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு புதிய கரும்பு ரகங்கள் குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் கூறினார். வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சுப்பிரமணியன் கரும்பிலிருந்து எரிபொருள் தயாரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் குறித்தும், சாகுபடி பரப்பை அதிகரிப்பதால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் விளக்கினார்.

விருத்தாசலம் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் முனைவர் ஹரிசுதன் நீடித்த நிலையான கரும்பு சாகுபடியின் முக்கிய தொழில்நுட்பங்களான ஒரு பரு கரணை நாற்றுகள் கொண்ட நடவு ,சொட்டுநீர், பாசனம் அமைத்தல் மற்றும் பராமரிப்பு, நீர்வழி உர மேலாண்மை ஆகியவற்றை பற்றிவிவசாயிகளுக்கு விரிவாக கூறினார். திருமானூர் வேளாண்மை உதவி இயக்குநர் லதா கரும்பில் களை மேலாண்மை மற்றும் முறைகள் குறித்தும் கூறினார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் சாத்தமங்கலம் , கோத்தாரி சர்க்கரை ஆலை பசுமைக்குடிலில் வளர்க்கப்படும் புதிய ரக நாற்றுகளை பார்வையிட்டு அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து கரும்பு வயல்வெளி அலுவலர்கள் மூலமாக கேட்டு தெரிந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் சாந்தி கரும்பு சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து கூறினார். பயிற்சியிக்கு துணை வேளாண்மை அலுவலர் பால்ஜான்சன் , உதவி வேளாண்மை அலுவலர்கள் முருகன், மகேந்திரன், ஜெய்சங்கர், ராதா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: