தமிழகம் முழுவதும் அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் டிப்ளமோ நர்சிங் படிப்புகள் பட்டப்படிப்புகளாக மாற்றம் 2020-21ம் கல்வி ஆண்டு முதல் நடைமுறை

வேலூர், மார்ச் 8: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டிப்ளமோ நர்சிங் படிப்புகளை பட்டப்படிப்புகளாக மாற்றும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனரகம் இறங்கியுள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை என 20 அரசு மருத்துவக்கல்லூரிகள், கோயம்புத்தூரில் ஒரு இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி, சென்னையில் ஒரு பல் மருத்துவக்கல்லூரி என மொத்தம் 22 மருத்துவக்கல்லூரிகளும், பல தனியார் மருத்துவக்கல்லூரிகளும் உள்ளன.

அரசு மருத்துவக்கல்லூரிகளில் 384 முதுநிலை டிப்ளமோ படிப்புகளை பட்ட மேற்படிப்புகளாக மாற்ற இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதனால், 2019-20ம் கல்வியாண்டில், 1,758 எம்.டி., எம்.எஸ்., பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதேபோல் டிப்ளமோ நர்சிங் படிப்புகளையும் பட்டப்படிப்புகளாக மாற்ற இந்திய நர்சிங் கவுன்சில் விதிமுறைகளை வகுத்துள்ளது.

வரும், 2020-21ம் கல்வியாண்டுக்குள் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள டிப்ளமோ நர்சிங் இடங்கள் பி.எஸ்சி நர்சிங் படிப்புகளாக மற்றப்படுகிறது. இதற்கான நடவடிக்கையில் மருத்துவக்கல்வி இயக்குனரகம் ஈடுபட்டுள்ளது. இதன் அடிப்படையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 100 நர்சிங் டிப்ளமோ படிப்புகள் பி.எஸ்சி பட்டப்படிப்புகளாக மாற்றப்படுகின்றன.

Related Stories: