ஆரணியில் உழவர் திருவிழா 85 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 262 வேளாண் இயந்திரங்கள் அமைச்சர் வழங்கினார்

ஆரணி, மார்ச் 8: ஆரணியில் நடந்த உழவர் திருவிழாவில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 85 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 262 வேளாண்மை இயந்திரங்களை அமைச்சர் வழங்கினார். ஆரணியில் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண்மை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். எம்பிக்கள் ஏழுமலை, வனரோஜா, எம்எல்ஏ தூசி மோகன், வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ராஜசேகர் முன்னிலை வகித்தனர். வேளாண் துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) துரைசாமி வரவேற்றார்.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் விழாவை தொடங்கி வைத்து பேசுகையில், `85 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ₹5 லட்சம் என மொத்தம் ₹4.25 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த மூலதன நிதியை கொண்டு குழுக்கள் தங்கள் தேர்வு செய்த பண்ணை இயந்திரங்களை வாங்கிக்கொள்ள அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, மொத்தம் 262 வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது'' என்றார். முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த விழுப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டார். இதில் ஆர்டிஓ மைதிலி, தாசில்தார்(பொறுப்பு) தமிழ்மணி, பிடிஓ குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: