10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இணையதளம் மூலம் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

திருவண்ணாமலை, மார்ச் 8: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலம் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 14ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பொதுத்தேர்வுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவு சீட்டு(ஹால்டிக்கெட்) மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், வரும் 14ம் தேதி பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவு சீட்டினை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து தங்களது பயனர் பெயர், கடவுச்சொல் ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கான பெயர் பட்டியலில் பள்ளி மாணவர், மாணவிகள் தங்கள் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகியவை திருத்தங்கள் ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர் பட்டியலில் உரிய திருத்தங்கள் செய்து கொள்ளலாம். என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: