பிரதம மந்திரி ஓய்வூதிய திட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் விண்ணபிக்கலாம் உதவி ஆணையர் தகவல்

திருவண்ணாமலை, மார்ச் 8: பிரதம மந்திரி ஓய்வூதிய திட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி தெரிவித்தனர். திருவண்ணாமலை ெதாழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) த.உஷா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: பாரத பிரதமரின் ஓய்வூதிய திட்டம் நாடு முழுவதும் கடந்த 5ம் தேதி முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது. சாலையோர வியாபாரிகள், ரிக்ஷா, பீடி தொழிலாளர்கள், கட்டிட ெதாழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் போன்ற 150 அமைப்பு சாரா ெதாழிலாளர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.

இதில் சேருபவர்களின் வயது 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். மாத வருமானம் ₹15 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மாத சந்தாவாக குறைந்த பட்சம் ₹55 முதல் அதிக பட்சம் ₹200 வரை செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் பொதுசேவை மையங்களுக்கு சென்று ஆதார் அட்டை நகல், மொபைல் எண், சேமிப்பு கணக்கு விவரங்கள் (ஐஎப்எஸ்சி கோடுடன்) முதல் தவணை தொகை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் சந்தாதாரர் செலுத்தும் ெதாகைக்கு நிகரான ெதாகையை மத்திய அரசு பங்களிக்கும். மேலும், சந்தாதாரருக்கு 60 வயது முடிவுற்றபின் மாதம் தோறும் ₹3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும், கணவர் இறந்தபின் மனைவிக்கு 50 சதவீதம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் அரசுவேலையில் உள்ளவர், இஎஸ்ஐ, பி.எப், என்பிஎஸ்சில் உறுப்பினர் ஆக இருப்பவர், வருமான வரி கட்டுபவர் சேர இயலாது. 60 வயது பூர்த்தியாவதற்குள் கணவர் இறந்தால் மனைவி இத்திட்டத்தை தொடரலாம். மேலும், இதுகுறித்த விவரங்களை பெற திருவண்ணாமலை ெதாழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புதிட்டம்), பொது சேவை மையம், எல்ஐசி மற்றும் இஎஸ்ஐ, பிஎப் அலுவலகங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: