குடிநீர் கிணறுக்கு கம்பிவேலி அமைக்க கோரிக்கை

மயிலம், மார்ச் 8: மயிலம் ஒன்றியத்தில் உள்ள கிராம பகுதிகளில் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் நீர் ஆதாரத்தை கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று உள்ள சூழ்நிலையில் குடிநீர் கிடைக்கும் இடத்தை பாதுகாப்பாக வைத்து சுகாதாரமான முறையில் நீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.கிராமத்தில் திறந்த நிலையில் உள்ள குடிநீர் கிணறுகளில் தேவையில்லாத பொருட்களை வீசுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இந்த நீரை மக்கள் குடிக்கும் போது நோய் பரவும் அபாயமும் உள்ளது. கிராம பகுதிகளில் திறந்த நிலையில் உள்ள குடிநீர் கிணறுகளுக்கு மேற்பகுதியில் கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் சுத்தமான குடிநீரை பொது மக்களுக்கு வழங்க முடியும். எனவே, திறந்த நிலையில் உள்ள பொதுவான குடிநீர் கிணறுகளை பார்வையிட்டு கம்பி வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: