பைக் மீது மினிவேன் மோதல் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி பலி

மரக்காணம், மார்ச் 8: மரக்காணம் அருகே கூனிமேடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(55), விவசாயி. ஆம் ஆத்மி கட்சியின் விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி(60) ஆகிய 2 பேரும் சம்பவத்தன்று மாலை ஒரே பைக்கில் சொந்த வேலை காரணமாக கூனிமேட்டில் இருந்து புதுவைக்கு சென்றுள்ளனர். மீண்டும் அதே பைக்கில் வீடு திரும்பி உள்ளனர். பைக்கை அரிகிருஷ்ணன் ஓட்டி வந்தார். கூனிமேடு பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது எதிரில் வந்த மினிவேன் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். கனகசெட்டிக்குளம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அரிகிருஷ்ணன் உயிரிழந்தார். சுப்ரமணி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: