ரொட்டிப்பால் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரி, மார்ச் 8: புதுச்சேரி பள்ளி கல்வித்துறையின் கீழ் ரொட்டிப்பால் ஊழியர்கள் 1000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு பால் காய்ச்சி வழங்குவதுடன், சுத்தம் செய்வது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். கடந்த 2003 முதல் 17 ஆண்டுகளாக பணிபுரியும் இவர்களுக்கு பள்ளி கல்வித்துறையும், பாண்லேவும் இணைந்து மாதம் ரூ.6,435 சம்பளம் வழங்கி வருகிறது. ஆனால், கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஆகையால், சம்பளம் வழங்கக் கோரி ரொட்டிப்பால் ஊழியர்கள், பள்ளி கல்வித்துறையில் கடந்த 5ம் தேதி முதல் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 3வது நாளாக போராட்டம் நீடித்தது. இதில் ரொட்டிப்பால் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி மற்றும் ரொட்டிப்பால் ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை பள்ளிக்கல்வி அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் 12ம் தேதிக்குள் (செவ்வாய்) சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்று போராட்டத்தை கைவிட்டு ரொட்டிப்பால் ஊழியர்கள் கலைந்து சென்றனர். 12ம் தேதிக்குள் சம்பளம் வழங்காவிட்டால் மீண்டும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: