மணக்குடையான் கிராமத்தில் மின்சாரம் துண்டிப்பால் குடிநீரின்றி மக்கள் அவதி கலெக்டரிடம் மனு

அரியலுர்,மார்ச் 6: அரியலூர் மாவட்டம்,செந்துறை அருகே மணக்குடையான் பஞ்சாயத்திற்குட்பட்ட மராக்குறிச்சி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 500 உறுப்பினர்களுடன் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்காக குடிநீருக்காக குடிநீர் நிலை மேல் தொட்டியில் நீர் ஏற்றி பொதுமக்களுக்கு தண்ணீர் கொடுத்துள்னர். இதற்கு உண்டான மின்வசதி முறையாக பெறாமல் மின்சார இணைப்பு இருந்ததால் அதனை மின்சார வாரியத்தினர் மின்வசதியை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி கிராம மக்கள் தண்ணீருக்காக ஆங்காங்கே வெகுதூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

தண்ணீருக்காக அருகே உள்ள கிராமம் மாத்தூர்அசாவீரன் குடிகாடு, குறிச்சி குளம் சுமார் 3 கிமீ சென்று தண்ணீர் எடுத்து வருவதாகவவும் இதனால் தங்களது அன்றாட பணிகள் மிகவும் பாதிப்பதாகவும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் மிகந்த சிரமப்படுவதாவும்.எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணக்குடையான் கிராம மக்கள் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாளை முன்னிட்டு கலெக்டரிடம் மனுவை கொடுத்தனர்.

Related Stories: