கலெக்டர் அலுவலகத்தில் அரியவகை ஆந்தை தஞ்சம்

திருப்பூர், பிப். 14: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் 5வது மாடியில் நேற்று காலை, கட்டிடத்தின் குழாய் ஒன்றில்  அரிய வகை ஆந்தை ஒன்று அமர்ந்திருந்தது. அங்கும் இங்கும் தத்தளித்த அந்த ஆந்தை வெள்ளை மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்பட்டது. இதுகுறித்து இயற்கை ஆர்வலர் ஒருவர் கூறுகையில், இது, இந்தியாவை வசிப்பிடமாக கொண்ட ஆந்தை இனத்தை சேர்ந்த பறவை. இதன் பெயர் “நைட் ஜார்’. ஏறத்தாழ 1.5 கிலோ எடையுள்ள இப்பறவை, பழங்கள் மற்றும் புழு,பூச்சியினங்களை உணவாக எடுத்துக் கொள்ளும்.

இரவில் மட்டும் உணவு தேடிச் செல்லும். அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் இப்பறவை, இரை தேடி வந்தபோது, வழி தவறியிருக்கக்கூடும். இது, சமவெளிப் பகுதிகளில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் குணம் உடையது.

இந்த இனப் பறவைகள் உடுமலை வனத்தில் அதிகளவில் வசிக்கின்றன என்றார்.

Related Stories: