பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்காக குடிநீருக்கு ‘சில்வர் கேன்’ அரசு பள்ளியில் அசத்தல்

திருப்பூர்,பிப்.14: திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் பாராப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில்,  ஜனவரி, 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு, தமிழக அரசு தடை விதித்தது. எனவே, இப்பள்ளி ஆசிரியர்கள், ‘மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தவிர்க்க வேண்டும். நம்மால் முடிந்தவரை ஒவ்வொன்றாக தவிர்த்து வந்தால், மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’ என, குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கினர்.

பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திலும், இதனை வலியுறுத்தினர். இதன் பலனாக, மாணவர்களில், பலர் சில்வர் தண்ணீர் கேன்களை வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘பிளாஸ்டிக் இல்லா பள்ளியை உருவாக்க முடிந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். பெற்றோர் தங்களால் இயன்றளவு குழந்தைகளுக்கு சில்வர் கேன்களை வாங்கி கொடுத்துள்ளனர். இது மற்ற மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வாக உள்ளது. விரைவில் அனைத்து மாணவர்களும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related Stories: