தாராபுரத்தில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தாராபுரம்,பிப்.14: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது தமிழக அரசின் அடக்குமுறைகளை கைவிடக்கோரி சாலைப் பணியாளர் சங்கத்தினர் தாராபுரத்தில் கருப்புகொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 தாராபுரம் தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலைபணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோட்டதலைவர் வெங்கிடுசாமி தலைமை தாங்கினார். கோட்டசெயலாளர் தில்லையப்பன்ஆர்ப்பாட்டம் குறித்த விளக்கி பேசினார்.

அரசு ஊழியர் சங்க வட்டகிளை தலைவர் ராஜூ முன்னிலையில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்களுக்கு கல்வித்திறன் பெறா ஊழியர்களுக்கான தர ஊதியம் வழங்கவேண்டும். சாலைபராமரிப்பு பணிகளை தனியார்வசம் ஒப்படைக்கும் கொள்கை முடிவை கைவிட்டு அரசே பணிகளை நடத்த வேண்டும்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது தமிழகஅரசு ஏவிவிடும் அடக்குமுறைகளை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கைகளில் கருப்புகொடி பிடித்து சாலைப்பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் தாராபுரம்,வெள்ளகோவில்,மடத்துக்குளம்,உடுமலை,மூலனூர் உட்கோட்டங்கள் சார்ந்த சாலைபணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: