அனுமதியின்றி விடிய விடிய பார்களில் மது விற்பனை போதையில் சிக்கும் வாலிபர்களுக்கு அபராதம்

நாமக்கல், பிப். 14:  நாமக்கல் நகரில், சட்டவிரோதமாக விடிய விடிய பார்களில், மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் மற்றும் திருச்செங்கோடு சாலையில் உள்ள பார்களில் மது விற்பனை 24 மணி நேரமும் நடைபெறுகிறது. இதைத்தவிர மோகனூர்ரோடு, திருச்செங்கோடு ரோட்டில் உள்ள தாபாக்களில் குட்டி மதுபான கடையே இயங்குகிறது. இந்த தாபாக்களை நடத்துபவர்கள் மதுவிலக்கு மற்றும் உள்ளூர் போலீஸ் அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் இங்கு சட்டவிரோத மதுவிற்பனை வெகுஜோராக நடைபெறுகிறது.காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அரசு மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. ஆனால் அந்த மதுக்கடைகளின் அருகாமையில் உள்ள பார்களில் மது விற்பனை தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதன் காரணமாக அதிகாலை 6 மணிக்கே எழுந்து குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாமக்கல் காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களுக்கு துணைபோவதால், இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது.

இரவை காட்டிலும் பகலில் தான் அதிகம் பேர் டூவீலரில் செல்வதாக போக்குவரத்து போலீசார் கூறுகிறார்கள். தினமும் குடிபோதையில் செல்லும் நபர்கள் மீது நாமக்கல், நல்லிபாளையம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துகிறார்கள். குடிபோதையில் செல்பவர்களுக்கு ₹2 ஆயிரம் முதல் 3500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பகலில் குடிபோதையில் சென்ற 48 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து, அபராதம் விதித்துள்ளனர். அதிக போதையில்சென்றால் அவர்களுக்கு அபராதமும் அதிகம் விதிக்கப்படுகிறது.  பார்கள் மட்டுமின்றி டீக்கடை பெட்டிக்கடை கூட மது பாட்டில்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. தங்குதடையின்றி மது காலை நேரங்களில் வாகனங்களில் செல்வர்களும் குடிபோதையில் செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் நகரில் அதிகரிக்கிறது.மதுக்கடைகள் குறித்த நேரத்தில் மூடுவது போல மதுபானபார்களையும் குறித்த நேரத்தில் மூடும் நிலையை நாமக்கல்லில் போலீசார் ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

Related Stories: