வனச்சட்ட நகல் எரிப்பு போராட்டம்

ஊட்டி, பிப். 14:  ‘16 ஏ’ வனச்சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தி வி.சி.க., சார்பில் வரும் 17ம் தேதி கூடலூரில் சட்ட நகல் எரிக்கும் போராட்டம் நடக்கிறது.இதுகுறித்து விசிக., மாவட்ட நிர்வாக குழு கூட்டம் ஊட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை வகித்தார். ஊட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டாரி வரவேற்றார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திரபாபு, மாவட்ட பொருளாளர் மண்ணரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இக்கூட்டத்தின் போது, செக்ஷன் 53 நிலங்களை வன நிலமாக மாற்றும் வனச்சட்டம் ‘16 ஏ’ என்ற புதிய சட்டத்தை தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதனால், கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே ‘16 ஏ’ வனச்சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்  என்பதை வலியுறுத்தி பிப்., 17ம் தேதி கூடலூரில் சட்ட நகல் எரிக்கும் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதேபோல், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில், அதற்கான பணிகள் மேற்கொள்ளும் விதமாக வரும் 18ம் தேதி குன்னூர், ஊட்டி தொகுதிகளில் கூட்டம் நடத்துவது, 24ம் தேதி கூடலூர் சட்டமன்ற தொகுதி கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 இறுதியாக விடுதலை சிறுத்தைகளின் தேசம் காப்போம் மாநாட்டில் கலந்துக் கொண்டு,பணியாற்றிய கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில், தொகுதி செயலாளர்கள் குன்னூர் சுதாகர், கூடலூர் பெரியசாமி, நகர செயலாளர்கள் கூடலூர் துயில்மேகம், ஊட்டி தம்பி இஸ்மாயில் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: