வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலை சீரமைக்க கோரிக்கை

பந்தலூர், பிப். 14: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் குளறுபடி உள்ளதாகவும், அதை முறைப்படுத்த வேண்டும் என பந்தலுார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.  அதன்படி நெல்லியாளம் நகராட்சியில் கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 44,590 ஆகும். அதேபோல் நகராட்சி  21 வார்டுகளில் சுமார் 10 ஆயிரத்து 729 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் 3 ஆயிரத்து 908 குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள குடும்பங்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

 இதில் குளறுபடி இருப்பதாகவும், முறயைாக வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள குடும்பங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தினர்.

 மேலும், பழைய பட்டியலில் ஆதிவாசி மக்கள் கூட இல்லை என்றும்,  தற்போதுள்ள பட்டியல்படி முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டத்தில் சேர பெரும்பாலும் வசதி படைத்தவர்களே உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகினற்னர்.

 எனவே, முதலமைச்சர் அறிவித்துள்ள இத்திட்டம் உண்மையான பயனாளிகள் பயன் பெற நெலாக்கோட்டை, சேரங்கோடு ஊராட்சிகளிலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ளவர்களின்  பட்டியலை சரி பார்க்க வேண்டும். மேலும் இவ்விரு ஊராட்சிகளில் மொத்த உள்ள 21 ஆயிரம் குடும்பங்களில் 10 ஆயிரத்து 880 குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ளவர்கள். எனவே நகராட்சி மற்றும் ஊராட்சிகள் பட்டியலை மறு ஆய்வு செய்து தகுதியான குடும்பங்களை இப்பட்டியலில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: