வேளாண் அறிவியல் நிலையத்தில் வெங்காய சாகுபடி பயிற்சி

நாமக்கல், பிப். 14: நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வரும் 22ம் தேதி வெங்காய பயிர்களின் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் நாற்றங்கால் மேலாண்மை, பயிர் இடைவெளி, உர மேலாண்மை, களை நிர்வாகம் அறுவடை மற்றும் மகசூல் குறித்த தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். இத்தகவலை வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் அகிலா தெரிவித்துள்ளார்.

Related Stories: