மாவட்டம் முழுவதும் பிடிஓ அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

தேன்கனிக்கோட்டை, பிப். 14:கெலமங்கலம், வட்டார வளர்ச்சி அலுவலகம் முன், மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. வட்ட துணை தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தியாகராஜன், வட்ட துணை செயலாளர் மாரப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் ஜீவா பேசினார். போராட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரத்திற்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்தங்கரை:  ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைக்கு முழு ஊதியம், தொடர்ச்சியாக 100  நாள் வேலை, 4 மணி நேரம் வேலைக்கு முழுஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், அவர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினார். அதில், சட்டதிட்டத்திற்கு உட்பட்டு வேலை வழங்கப்படும் என உறுதி கூறினார். இதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாநில பொதுசெயலாளர் நம்புராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காவேரிப்பட்டணம்:காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு, நேற்று போராட்டம் நடந்தது. இதில், ஒன்றிய துணைத்தலைவர் அண்ணாமலை, மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாநில துணை தலைவர் பாரதிஅண்ணா ஆகியோர் பேசினர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன், ராஜா, கோவிந்தராஜ், பாலகிருஷ்ணன், சத்யா மற்றும் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Related Stories: