ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்கு ஒடையின் குறுக்கே தூண் அமைக்கும் பணி துவக்கம்

ஈரோடு, பிப். 14: ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகளுக்காக சத்தி சாலையில் பிச்சைக்காரன் ஓடையின் குறுக்கே தூண்கள் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

  ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பவானி அடுத்துள்ள ஊராட்சிக்கோட்டையில் இருந்து ஈரோடு வரை சத்தி சாலை, அக்ரஹாரம் சாலை ஆகிய 2 சாலையோரங்களில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் அக்ரஹாரம் சாலையில் உள்ள பிச்சைக்காரன் ஓடையின் குறுக்கே குழாய் கொண்டு செல்ல வசதியாக தூண்கள் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்ததையடுத்து தற்போது ஈரோடு சத்தி சாலையில் உள்ள பிச்சைக்காரன் ஓடையின் குறுக்கே குடிநீர் குழாய்கள் கொண்டு செல்ல வசதியாக தூண்கள் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

   இதற்காக பிச்சைக்காரன் ஓடையில் வரும் கழிவு நீரை மணல் மூட்டைகள் கொண்டு அடைத்து ஒரு பகுதியில் மட்டும் செல்லும் வகையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.

ஓடையின் ஒரு பகுதியில் பணிகள் முடிக்கப்பட்ட பிறகு பணிகள் முடிக்கப்பட்ட பகுதிக்கு கழிவு நீர் திருப்பி விடப்பட்டு மீதமுள்ள பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: