சாலை விபத்துக்களில் 6 பேர் பரிதாப பலி

கோவை, பிப்.14:கோவையில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துக்க ளில் 6 பேர் பரிதாபமாக பலியாயினர்.

 கோவை அன்னூர் ஒட்டர்பாளையம் புது காலனியை சேர்ந்தவர் துரைசாமி(62). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் மேட்டுப்பாளையம் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். ஒட்டர் பாளையம் பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார், மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் கிட்டாம் பாளையம் பழனிசாமியை போலீசார் கைது செய்தனர்.

 ஆம்பூரை சேர்ந்தவர் குமார்(19). பொள்ளாச்சி கோட்டூர் அடுத்த பக்கோதி பாளையத்தில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம் இரவு தொழிற்சாலை வளாகத்தில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது தொழிற்சாலைக்கு தண்ணீர் லோடு ஏற்றி வந்த லாரி மோதி பலியானார். போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சுந்தரை கைது செய்தனர்.

கோவை வீரகேரளம் அருகே உள்ள கருமலை செட்டி பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் பார்த்திபன்(29), இவர் நேற்று முன் தினம் கோவை ராமகிருஷ்ணா மில் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கணபதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விஸ்வநாதன்(19), ஓட்டி வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பார்த்திபன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 ஒண்டிபுதூர் சுங்கம் மைதானத்தை சேர்ந்தவர் ராஜன்(45). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் ஒண்டி புதூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது கோவையில் தங்கி பயின்று வரும் உசிலம் பட்டியை சேர்ந்த மாணவர் ராமகிருஷ்ணன் (24), என்பவர் ஓட்டி வந்த பைக் ராஜன் மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். ராஜன் கோவை அரசு மருத்துவமனையிலும், ராமகிருஷ்ணன் மதுரை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்க பட்டனர். சிகிச்சை பலனின்றி ராஜன் இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 கோவை இடையார்பாளையம் தடாகம் ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி(72). இவர் தடாகம் ரோட்டில் மொபட்டில் நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒண்டிபுதூர்-வடவள்ளி இடையே இயக்கப்படும் தனியார் பஸ் மோதி இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் கோலார் பட்டியை சேர்ந்த ஜெகநாதன்(24) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: