தமிழகத்தில் 45 % பேர் இதய நோயால் அவதி

தாராபுரம், பிப். 14:  தமிழகத்தில் 45 சதவீதம் பேர் இதய நோயால் அவதியுறுகின்றனர் என டாக்டர் பக்தவத்சலம் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மகாராணி நர்சிங் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்த பட்டமளிப்பு விழாவில் கோவை கே.ஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

நர்சிங் பணி என்பது அறப்பணி.நர்சுகள் அளிக்கும் சேவை அளப்பரியது. நர்சுகள், கடவுளுக்கு சமமானவர்கள். நர்சிங் முடித்த மாணவிகளுக்கு இந்திய அளவில் மட்டுமின்றி, உலகளவில் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. இன்றைய வாழ்க்கை முறையில் இருதய நோய் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 45 சதவீதம் பேர் மாரடைப்பு நோயால் அவதியுறுகின்றனர். இது, இந்திய அளவில் 35 சதவீதமாக உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, விரைவாக முதலுதவி சிகிச்சை அளித்து, தரமான மருத்துவமனைக்கு கொண்டுசென்றால், அவர்களை காப்பாற்ற முடியும்.இதற்கு, முதலுதவி சிகிச்சை அளிப்பது முக்கியம். இது எப்படி அளிக்க வேண்டும் என்ற வழிமுறை தெரிந்து வைத்திருக்க வேண்டும். நர்சிங் மாணவிகள், இந்த வழிமுறையை அருகில் உள்ளவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். முறையான உடற்பயிற்சி, நல்ல உணவுப்பழக்கம், தரமான சிகிச்சை ஆகியவற்றின் மூலம் இருதய நோயை வெல்லலாம். இவ்வாறு டாக்டர் பக்தவத்சலம் பேசினார்.

Related Stories: