கோவையில் காதலர் தின எதிர்ப்பு இந்து முன்னணியினர் 56 பேர் கைது

கோவை, பிப்.14:கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்த 56 பேரை போலீசார் கைது செய்தனர்.

 உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை கோவை காந்திபுரம் சித்தி விநாயாகர் கோவில் அருகே திரண்ட இந்து முன்னணியினர் திடீர் போராட்டம் நடத்தினர். மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா தலைமையில், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் முன்னிலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காதலர் தினத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

 தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக இந்து முன்னணியை சேர்ந்த 56 பேரை கைது செய்தனர்.  இதேபோல் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

Related Stories: