முசிறி பைபாஸ் சாலையில் தடுப்புக்கட்டையில் மோதி லாரி கவிழ்ந்தது

தா.பேட்டை, பிப்.14: முசிறியில் கெமிக்கல் ஏற்றிச்சென்ற லாரி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் காயமடைந்தார். லாரியின் பின்பக்க சக்கரங்கள் கழன்று ஓடியது.முசிறியில் சென்டர் மீடியனில் மோதி லாரி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையிலிருந்து கெமிக்கல் கேன்கள் ஏற்றிக்  கொண்டு லாரி ஒன்று கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்தது. டிரைவர் ரவி என்பவர் லாரியை ஓட்டி சென்றார். முசிறி பைபாஸ் ரோட்டில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சென்டர் மீடியனில் லாரி மோதி கவிழ்ந்தது. இதில் பின் பக்க சக்கரங்கள் தனியாக கழன்று ஓடியது.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தினால்  அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. லாரி டிரைவர் ரவி காயமடைந்தார்.  அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Related Stories: