சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1.43 கோடி உண்டியல் காணிக்கை

மண்ணச்சநல்லூர், பிப்.14: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. ஒரு கோடியே 43 லட்சத்து 6 ஆயிரத்து 149 மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் உண்டியல் காணிக்கைகள் வசூலானது.தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாது திருச்சி சமயபுரம் மாரியம்மன்கோயிலாகும். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களால் உண்டியலில் செலுத்தப்படும்  மாதமிருமுறை உண்டியலை திறந்து எண்ணப்படும். இந்த மாதத்தில் முதல் முறையாக நேற்று கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. கோயில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் அறநிலையதுறை அதிகாரிகள் முன்னிலையில்  உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் ஆகியோர்  காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரொக்கமாக ஒரு கோடியே 43 லட்சத்து 6 ஆயிரத்து 149 ரூபாயும், 3 கிலோ 150 கிராம் தங்க நகைகள், 12 கிலோ 930 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வளைகுடா நாடுகளின் கரன்சிகள் 250ம் இருந்தது கணக்கிடப்பட்டது. இவை அனைத்தும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன.

Related Stories: