குளித்தலையில் நகராட்சி வரி செலுத்துவதில் நிர்வாக குளறுபடி பொதுமக்கள் குழப்பம்

குளித்தலை, பிப்.14 குளித்தலை நகராட்சியில் வரி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள நிர்வாக குளறுபடியால் பொதுமக்கள் குழப்பமடைந்து வருகின்றனர். இதுகுறித்து குளித்தலை மக்கள் நல வாழ்வு சங்க செயலாளர் கார்த்திகேயன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: குளித்தலை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் குடிசை வீடு முதல் மாடி வீடு வரை ஏராளமான வீடுகள் உள்ளது. இந்நிலையில் குளித்தலை நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த ஆண்டிற்கான வீட்டு வரி, தண்ணீர் வரி என வாரத்திற்கு ஒரு கேட்பு தொகை (டிமான்ட் நோட்டீஸ்) வருகிறது. அதன் பிறகு 55 சதவீதம் சேர்த்து மேலும், ஒரு கேட்பு தொகையை பணியாளர்கள் தருகின்றனர். மேலும் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த தவறினால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலி பெருக்கி மூலம் நகராட்சி நிர்வாகம் விளம்பரம் செய்து வருகின்றனர். இதனால் குளித்தலை நகராட்சியில் ஏற்பட்டுள்ள நிர்வாக குளறுபடிகளால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதனால் பொதுமக்கள் குழப்பத்தை நீக்கி முறைப்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: