கரூர் அருகே நொய்யல் பகுதியில் பழுதடைந்த துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் பொதுமக்கள் கோரிக்கை

கரூர், பிப்.14:   கரூர் அருகே உள்ள நொய்யல் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த மக்களின் பயன்பாட்டிற்காக 1982ம் ஆண்டு சுகாதாரத்துறை சார்பில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. கட்டடம் பராமரிப்பில்லை, மேலும் கட்டி பல ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் செவிலியர் யாரும் இங்கு பணியாற்ற முன்வரவில்லை. தொடர்ந்து கைவிடப்பட்ட கட்டடத்தில் செடி,கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. சுகாதாரத்துறையினரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை. உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து பழுதடைந்த கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: