பஞ்சமாதேவி ஊராட்சியில் 10 நாட்களுக்கு முன் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டும் சாலை பணி துவங்கவில்லை

கரூர், பிப்.14.  கரூர் ஒன்றியம் பஞ்சமாதேவி ஊராட்சியில் பல இடங்களில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. ஆனால் தார்சாலை பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.  பாராளுமன்ற  தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வரப்போகும் நிலையில் சாலைப்பணிகளுக்கான  ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலை பணிகளை துவக்கி  வைப்பதற்கான பூமிபூஜையும் நடைபெற்று வருகிறது. தேர்தல்தேதி  அறிவிக்கப்பட்டதும் அரசு பணிகளை துவக்கி வைக்கக்கூடாது அறிவிப்பு செய்யவும்  கூடாது என்ற நடத்தை விதிமுறைகள் அமலுக்குவந்துவிடும். எனினும் பல இடங்களில்  இன்னமும் ஜல்லிகற்கள் கொட்டப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. கரூர் ஒன்றியம்  பஞ்சமாதேவி ஊராட்சியில் பல தெருக்களில் தார்சாலை அமைப்பதற்காக கற்கள்  குவியலாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக  குவித்து வைக்கப்பட்டிருக்கிறதே தவிர சாலை பணிகள் துவங்கும் அறிகுறியே  தென்படவில்லை. சாலையின் பெரும் பகுதியை அடைத்துக்கொண்டு உள்ளது. இதனால்  வாகனங்களில் சென்றுவர முடியவில்லை. இருசக்கர வாகனதத்தில் மட்டுமே  செல்லமுடிகிறது. எனவே சாலைப்பணியை விரைவில் துவங்கி துரிதமாக புதிய சாலை  அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: