தடை விதிக்கப்பட்ட மாநாடு குறித்து துண்டு பிரசுரம் விநியோகம் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது

தஞ்சை, பிப். 14: திருச்சியில் நடைபெறும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநாடு தொடர்பான துண்டு பிரசுரங்களை தஞ்சையில் விநியோகம் செய்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.திருச்சி உழவர் சந்தையில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ‘கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில்’ என்ற தலைப்பில் வரும் 23ம் தேதி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாநாடு தொடர்பாக தஞ்சை புதிய மற்றும் பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த 9 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சங்கரபுரம் ராஜேந்திரன் (61), விழுப்புரம் மாவட்டம் வி.மருதூர் எம்ஆர்கே நகர் மதுரைவீரன் (21), கடலூர் மாவட்டம் பால்ராஜ் (19), திருச்சி மாவட்டம் பாலக்கரை ஹாஜாமொய்தீன் தெரு கார்த்திக் (28), மதிமாறன் (22), திருச்சி தில்லைநகர் 5வது தெரு ரம்யா (25), தில்லைநகர் 9வது தெரு மைக்கேல் (30), தில்லைநகர் பிள்ளையார் கோயில் தெரு செல்வகுமார் (23), தஞ்சை மாவட்டம் மானோஜிப்பட்டி தியாகராஜன் நகர் காந்தி (58) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: