தஞ்சை தாமரை பன்னாட்டு பள்ளியில் மழலையர் வகுப்பினருக்கு விளையாட்டு விழா

தஞ்சை, பிப். 14: தஞ்சையில் உள்ள தாமரை பன்னாட்டு பள்ளியின் 10ம் ஆண்டு மழலையர் வகுப்பினருக்கு விளையாட்டு விழா நடந்தது.பள்ளி தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். பள்ளி துணைத்தலைவர் நிர்மலா வெங்கடேசன், முதுநிலை முதல்வர் திரு கணேஷ் ராஜகோபாலன், துணை முதல்வர் விஜயா தர், தொடக்கநிலை முதல்வர் ஏஞ்சலின் வில்லியம்ஸ் முன்னிலை வகித்தனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதக்கங்கள் வழங்கினர்.இதைதொடர்ந்து மழலையர் வகுப்பு மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.

Related Stories: