டிரைவரின் லக்கேஜிக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததால் அரசு பேருந்தை இயக்காமல் நிறுத்தம் 3 மணி நேரம் தாமதமாக ெசன்றது

கும்பகோணம், பிப். 14: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து நேற்று சென்றது. இதில் டிரைவராக நாகராஜ், கண்டக்டராக கருப்பையா பணியில் இருந்தனர். இந்நிலையில் டிரைவர் நாகராஜின் மகன், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி படித்து வருகிறார். இதனால் ஒரத்தநாட்டில் இருந்து சென்னைக்கு சென்ற பேருந்தில் தனது மகனுக்கு தேவையான பொருட்களை நாகராஜ் ஏற்றி சென்றார்.தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு பேருந்து சென்றபோது பரிசோதகர்கள் ஏறி சோதனை செய்தனர். அதில் நாகராஜ் எடுத்து செல்லும் பொருட்களுக்கு லக்கேஜ் டிக்கெட் எடுக்காமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லக்கேஜ் டிக்கெட்டாக ரூ.500 வசூலித்தனர். இதையடுத்து கும்பகோணம் பஸ் நிலையத்துக்கு பேருந்து வந்தது. அப்போது அங்கு ஏறிய மற்ெறாரு பரிசோதகர்கள் சோதனை செய்து லக்கேஜிக்கு குறைவாக டிக்கெட் போடப்பட்டுள்ளது என்று கூறி கூடுதலாக ₹0244யை வசூலித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் டிரைவர் நாகராஜ், கண்டக்டர் கருப்பையா ஆகியோர் கேட்டனர்.அப்போது அதிகாரிகள் சூழ்ந்து கொண்டு நாகராஜையும், கருப்பையாவையும் திட்டியுள்ளனர். இதனால் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு பேருந்தை இயக்க முடியாது என்று நாகராஜ், கருப்பையா கூறினர். இதனால் 3 மணி நேரமாக சென்னைசெல்லும் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது.இதையடுத்து போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அதிகாரிகள் மிரட்டுவதாக இருவரும் தெரிவித்தனர். உடனடியாக புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், போக்குவரத்து அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒரத்தநாட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்தை இயக்க முடியாது என்று இருவரும் கூறினர். இதையடுத்து மாற்று டிரைவர், கண்டக்டரை பணியில் அமர்த்தி பேருந்து இயக்கப்பட்டது.இதுகுறித்து தொமுச பேரவை பொது செயலாளர் பாண்டியன் கூறுகையில், டிரைவரின் லக்கேஜிக்கு ரூ.350 மட்டும் தான் டிக்கெட் போட வேண்டும் ஆனால் லக்கேஜிக்காக ரூ.744 வசூலித்துள்ளனர். மேலும் டிரைவர், கண்டக்டரை மிரட்டியதால் பேருந்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்து அனைத்து அரசு பேருந்துகளில் லக்கேஜை ஏற்றாமல் செல்வதுடன், தலைமை அலுவலக முன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

Related Stories: