கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் இலவச கோழிகுஞ்சுகள் வழங்குவதில் முறைகேடு மறு பரிசீலனை செய்ய கலெக்டருக்கு கோரிக்கை

கொள்ளிடம், பிப்.14: கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் பயனாளிகளுக்கு, அரசின் சார்பில் இலவச கோழிக்குஞ்சுகள் வழங்குவதற்கு பயனாளிப் பெட்டிகள் ஒரு தலை பட்சமாக தயார் செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்திற்குட்பட்ட 42 ஊராட்சிகளை சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு ஊராட்சியை சேர்ந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் விதவைகள் ஆகியோர்களுக்கு அரசின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.50 வீதம் கோழிகுஞ்சுகள் மற்றும் கோழி கூண்டுகள் வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு மற்றும் கால்நடை துறையை சேர்ந்த ஊழியர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் பயனாளி பட்டியல் தேர்வு செய்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 200 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பயனாளிகளை தேர்வு செய்ததில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் ரகசியமாகவும், ஒரு தலைப்பட்சமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து சமுக ஆர்வலர் காமராஜ் கூறுகையில், தமிழக அரசின் இலவச கோழிக்குஞ்சு கொடுக்கும் திட்டத்தின் கீழ் யாருக்கும் விளம்பரப்படுத்தாமல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முறைகேடு நடந்துள்ளதால், மீண்டும், மறுபரிசீலனை செய்து, புதியதாக தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.       

Related Stories: