நாகை, கீழ்வேளூர், திருமருகல், கீழையூர் பகுதியில் வைக்கோல் விலை போகாததால் வயலிலேயே சருகாகும் அவலம் உளுந்து பயிருக்கும் ஆபத்து

நாகை, பிப்.14:நாகை, கீழ்வேளூர், திருமருகல்,கீழையூர் பகுதியில் வைக்கோல் விலை நாகை மாவட்டம் நாகை, கீழ்வேளூர், திருமருகல், கீழையூர் ஒன்றிய பகுதியில் தற்போது சம்பா நெல் அறுவடை பணி நடைபெறுகிறது. பெரும்பாலும் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படுகிறது. கஜா புயல் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு போன்ற பிரச்னையால் குறைந்த மகசூல் நடைபெறுவதாலும், நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியாததாலும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டபோது வைக்கோல்கள் விலை போகாததாலும், ஆள் தட்டுப்பாட்டாலும் வைக்கோல்களை வயலில் இருந்து அப்புறப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். மேலும் தற்போது நெல் தரிசில் கோடை சாகுபடியான உளுந்து, பச்சை பயறு விதைப்பு செய்யப்பட்டு முளைத்து தற்போது 20 நாள் கடந்துள்ளது. இந்நிலையில் உளுந்து செடியில் வைக்கோலை அகற்ற முடியாத நிலையில் உள்ளதால் அந்த பயறு வகை செடிகள் பாதிப்பு அடைந்துள்ளது. வைக்கோல்களை அகற்ற போதிய ஆள் கிடைக்காததாலும், விலை போகாததாலும் உடனே உளுந்து, பயறு செடியின் மேல் உள்ள வைக்கோல்களை அகற்ற முடியாததால் உளுந்து, பச்சை பயறு பயிர்கள் பாதிக்கும் அபாயத்தில் உள்ளது. ஏற்கனவே மகசூல் குறைவு, விளைந்த நெல்லை விற்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ள நிலையில், வைக்கோல்களும் விலை போகாதததால் விவசாயிகள் மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: