தரங்கம்பாடியில் பனங்கிழங்கு எடுக்கும் பணி தீவிரம் சர்க்கரை நோய் குணமாவதால் ஆர்வமுடன் வாங்கும் மக்கள்

தரங்கம்பாடி. பிப்.14: நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் பனங்கிழங்கு எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அத்தனை பொருட்களும் மனிதனுக்கு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்பட கூடியது பனங்கிழங்கு. இது சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. நரம்பு தளர்ச்சி, மலச்சிக்கல் உள்ளிட்ட நோய்களுக்கும் இது அருமருந்தாக உள்ளது. மணலில் உற்பத்தியாகும் பனங்கிழங்கை கடலோர கிராமங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. பனம் பழங்களை மணலில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அதில் பதியம் போடுகின்றனர். பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் அது முளைத்து மேலே வருவதற்குள், அதனை மண்வெட்டியால் தோண்டி எடுத்து சுத்தம் செய்து, 50 கிழங்குகள் ஒரு கத்தை என்ற அளவிற்கு கத்தை கத்தையாக கட்டி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனை கிராம பகுதிகளில் வேக வைத்தும் விற்பனை செய்கின்றனர். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் கல், பதநீர், நுங்கு, பனை ஓலை, பனங்கை உள்ளிட்ட அனைத்தும் மனிதனுக்கு ஒவ்வொரு வகையில் பயனுள்ளதாக அமைகிறது. மன்னர் ஆட்சி காலத்தில் இந்த மரங்கள் போரின்போது வரும் பீரங்கி குண்டுகளை தாக்கி பிடிக்கும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. மேலும், பனை மரத்தித்திற்கு ஆயுட் காலம் வேறு எந்த மரத்திற்கும் கிடையாது. இப்படி பல்வேறு சிறப்புகளை வாய்ந்த பனை மரத்தில் இருந்து பெறப்படும் பனங்கிழங்கு விற்பனைக்கு வரும் காலமாகும். அதனால் பனங்கிழங்கு எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காழியப்பநல்லூர் விவசாயி சிவக்குமார் கூறியதாவது. பனங்கிழங்கு பனங்கொட்டையில் இருந்து மணலில் வளர்கிறது. இதற்கு எந்த உற்பத்தி செலவும் கிடையாது. மணல் பகுதிகளில் பனங்கொட்டையை போட்டு விட்டால் போதும் அதன் அடிபாகத்தில் இருந்து கிழங்கு கிளம்பி மணலில் வளரும் 3 மாதத்தில் இதை பயன்பாட்டிற்கு எடுத்து விடலாம். உடல் உழைப்பு மட்டும் இருந்தால் போதும் பனங்கிழங்கு உற்பத்தி செய்து விடலாம். இந்த பனங்கிழங்கை எடுக்காவிட்டால் இதுவே வளர்ந்து பனை மரமாகிவிடுகிறது.  பனங்கிழங்கு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படுகிறது. சக்கரை நோயை கட்டு படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும், நரம்பு தளர்ச்சியில் இருந்து விடுபடவும், பனங்கிழங்கு சாப்பிடுவது அரிய மருந்தாகும். பனங்கிழங்கை வேகவைத்து அதன் பின் மேல்தோலையும், கிழங்கில் உள்ள நார்களையும் எடுத்து விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைத்து அதன் பின் மிக்ஸியில் போட்டு பவுடராக்கி தினமும் பாலில் போட்டு சாப்பிடுவது மிகவும் உடல் நலத்திற்கு சிறப்பானது. ஹார்லிக்ஸ் போன்று இந்த பவுடரை பயன்படுத்தலாம். நாகை  - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எங்கள் வீடும், தோட்டமும் இருப்பதால் பனங்கிழங்கை அவித்து அதை வீட்டு வாசலில் விற்பனைக்கு வைத்துள்ளோம். சென்னை, கடலூர், நாகூர், நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வாகனங்களை நிறுத்தி பனங்கிழங்கை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.

பவுடராக்கியும் பயன்படுத்தலாம்

பனங்கிழங்கு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படுகிறது. சக்கரை நோயை கட்டு படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும், நரம்பு தளர்ச்சியில் இருந்து விடுபடவும், பனங்கிழங்கு சாப்பிடுவது அரிய மருந்தாகும். பனங்கிழங்கை வேகவைத்து அதன் பின் மேல்தோலையும், கிழங்கில் உள்ள நார்களையும் எடுத்து விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைத்து அதன் பின் மிக்ஸியில் போட்டு பவுடராக்கி தினமும் பாலில் போட்டு சாப்பிடுவது மிகவும் உடல் நலத்திற்கு சிறப்பானது.

Related Stories: