பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருமயம், பிப்.14:  திருமயம் அருகே பராமரிப்பின்றி குண்டும் குழியுமான சாலை  சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பேரையூர் ஊரட்சிக்குட்பட்ட  கீழக்காடு கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து  வருகின் றனர். அப்பகுதியில் அரசு போக்குவரத்து வசதிகள் ஏதும் இல்லாத  நிலையில் கிராம மக்கள் வெளியூர் செல்ல, மாணவர்கள் பள்ளி செல்ல இரு சக்கர  வாகன ங்களையே நம்பி உள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பேரையூரில் இருந்து  கீழாக்காடு வரும் ஒரே சாலையை போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.  இச்சாலையானது ஒன்றிய கட்டுப் பாட்டில் உள்ள நிலையில் கடந்த 5வருடங்களுக்கு  முன்னர் சரிசெய்யப் பட்டது. அதன் பின்னர் தொடர் பராமரிப்பு இல்லாத  காரணத்தால் சாலை சேதமடை ந்து கீழாக்காடு கிராமத்தில் இருந்து பள்ளி செல்லும்  மாணவர்கள், முதியோர்கள், வாகன ஓட்டிகள் சாலையை கடக்க பெரும் சிரமப்பட்டு  வருகின்றனர். மேலும் குண்டும் குழியுமான சாலையை கடக்க வாகனங்கள்  தடுமாறுவதால் அவசரத்துக்கு மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாமல் அப்பகுதி  மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனிடையே பழுதடைந்த கீழக்காடு சாலையை  அரசந்தம்பட்டி உள்ளிட்ட கிராம மக்களும்  பயன்படுத்தி வருவதால் சம்பந்தப்பட்ட சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: