கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் செவ்வாய்ப்பட்டி அரசு பள்ளிக்கு தூய்மை விருது கட்டுரை போட்டியில் மாநில அளவில் 2ம் இடம்

கறம்பக்குடி, பிப். 14: கறம்பக்குடி ஒன்றியம் பிலாவிடுதி ஊராட்சியில் செவ்வாய்பட்டி கிராமம் அமைந்துள்ளது. செவ்வாய்ப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கல்வி ஊக்கப்பணிகளில் பெயர் பெற்று வருகின்றனர். இப்பள்ளியில் செயல்பாடுகளின்படி தூய்மை பாரதம் மற்றும் சுகாதாரம் சார்ந்த நடைமுறை, பழக்கவழக்கங்களை மாணவர்களிடம் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள்  ஊக்கப்படுத்தி, பின்பற்றி வருகின்றனர்.அதன் அடிப்படையில் தூய்மையான பாரதம் தூய்மை பள்ளிக்கான இந்த ஆண்டுக்கான விருதை மாவட்ட அளவில் செவ்வாய்ப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி பெற்று சாதனை படைத்துள்ளது. தூய்மை பள்ளிக்கான விருதை பெற்ற பளி தலைமை ஆசிரியை சந்திரா, சக ஆசிரியைகளை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.மேலும் அப்பள்ளியில் பயிலும் 7ம் வகுப்பு மாணவி செந்துஜா, தூய்மை பாரதம் தூய்மையான பள்ளி மற்றும் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு கட்டுரை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். தூய்மை பள்ளிக்கான விருது பெற்ற தலைமை ஆசிரியர் சந்திரா, சக ஆசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற மானவியை கலெக்டர் கணேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக கல்விக்குழு, கல்வி மேலாண்மை குழுத்தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: