பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு விவசாயிகள் எதிர்பார்ப்பு

அறந்தாங்கி,பிப்.14:  பிரதம மந்திரியின் விவசாயிகள் கவுரவ ஊக்கத் தொகை பெற  விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஒருமாத காலம் வழங்க வேண்டும் என அரசுக்கு  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது,  பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட மோடி, பாஜக ஆட்சி அமைந்தால்  வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு, இந்திய குடிமகன்கள்  ஒவ்வொருவர் பெயரிலும், அவர்களது வங்கி கணக்கில் தலா ரூ.15லட்சம் வரவு  வைக்கப்படும் என கூறியிருந்தார். இருப்பினும் அவர் பிரதமர் மோடி கூறியபடி  இந்திய குடிமகன்கள் கணக்கில் பணம் எதுவும் வரவு வைக்கப்படவில்லை. இதனால்  மக்கள் மோடி மீது அதிருப் தியடைந்து, தங்களது கோபத்தை சமூக ஊடகங்கள் வழியாக  காட்டி வந்தனர். விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள  நிலையில், சமீபத்தில் நடந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில்,இந்தியாவில் உள்ள சிறு குறு விவசாயி களின் வங்கி கணக்கில், ஆண்டிற்கு ரூ.6ஆயிரம் வரவு வைக்கப்படும் என அறிவி க்கப்பட்டது. அதன்படி 3தவணைகளாக தலா ரூ.2ஆயிரம் வீதம் வழங்கப்படுவ தாக அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த ஊக்கத் தொகைக்கான  விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு, குறிப்பிட்ட சில நாட்களுக்கு சிறு, குறு  விவசாயிகள் அடையாள அட்டை, ஆதார், சிட்டா நகல், வங்கி கணக்கு புத்தகநகல்,  கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ், விண்ண ப்ப படிவத்தில் புகைப்படம் ஒட்டி  கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு  விண்ணப்பிக்கும் விவசாயி களுக்கு மட்டுமே கவுரவ ஊக்கத்தொகை வழங்கப்படும் என  தெரிகிறது. இதனால் கடந்த 2நாட்களாக பிரதம மந்திரியின் விவசாயிகள் கவுரவ  ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்க ஏராளமான விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலர்  அலுவலகங்களிலும், கணினி சிட்டா எடுக்க கம்ப்யூட்டர் சென்டர் வாசலிலும்  காத்து கிடக்கின்றனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கா விவசாயிகள் கணினி  சிட்டா எடுப்பதால், தமிழக அரசின் நிலப்பதிவேடு மின்னணு சேவை  இணை யப்பக்கம்  முடங்கியது. இதனால் விவசாயிகள் கணினி சிட்டா எடுக்க முடியாமல்  அவதிப்பட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:மத்திய அரசு  அறிவித்துள்ள விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான  காலக் கெடு குறைவாக உள்ளது. இந்த காலக் கட்டத் திற்குள் 10 சதவீத விவசாயிகள்  கூட விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. நேற்று கணினி சிட்டா பெற முடியாத  அளவிற்கு நிலப்பதிவேடு மின்னணு சேவை இணையப்பக்கம் முடங்கியது. இதனால்  நாங்கள் கணினி சிட்டா பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம். .

Related Stories: