ஆலங்குடி பகுதியில் சீமைக்கருவேல, தைல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றது

ஆழ்குழாய் கிணறுகள் வறண்டன

கடும் குடிநீர் தட்டுப்பாடு

காலிகுடங்களுடன் மக்கள் தவிப்பு

ஆலங்குடி,பிப்.14: ஆலங்குடி பகுதிகளில் தைலமரங்கள், சீமைக்கருவேல மரங் களால் அதளபாதாளத்திற்கு சென்ற நிலத்தடி நீர்மட்டத்தால் ஆழ்குழாய் கிணறு கள் வறண்டு போய் உள்ளன. கடும் குடிநீர் தட்டுப்பாடால் காலிகுடங்களுடன் மக்கள் அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா சுமார் 27ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்ட பகுதியாகும். ஆலங்குடி, வல்லநாடு, வெண்ணாவல்குடி, கீரமங்கலம் என 4பிர்காக்களும், 73 வருவாய் கிராமங்களும் உள்ளன. ஆலங்குடி தாலு காவில் ஒரு லட்சத்து 91ஆயிரத்து 124மக்களும் வசித்து வருகின்றனர்.இப் பகுதியில் பெரும் பான்மையான மக்கள் நெல், கரும்பு, வாழை, சோளம், கடலை, பூ என பல்வேறு பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். பயிர்களுக்கு ஏற்றார்போல தண்ணீர் பற்றாக்குறையே இல்லாமல் இருந்து வந்த தால் விவசாயிகள் அனைத்து வகை பயிர்களையும் விவசாயம் செய்து வந்தனர். இந்த பயிர்கள் அனைத்தும் நிலத்தடி நீரை உறிஞ்சும் பயிர்களாக இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் குறையாமல் இருந்தது. அதனால் சுமார் 50அடி ஆழத்தி ற்கு கிணறுகளை வெட்டி தண்ணீர் இறைத்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் ஆலங்குடி, வல்லநாடு, வெண்ணாவல்குடி பிர்காவிலும் காயாம் பட்டி, வேப்பங்குடி பொற்பனைகோட்டை, மணிப்பள்ளம், மாங்கோட்டை பகுதி களில் வனத்துறைக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு அளவு நிலம் உள்ளது.இந்நிலங்களில் வனத்துறையினர் கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக தைலமரத்தை பயிரிட்டு வருகின்றனர்.

 

இந்த தைலமரங்கள் பயிர் செய்த 5ஆண்டுகளில் அறுவடை செய்யக்கூடியவை. அறுவடை செய்தாலும், அதே வேர்களில் இருந்து மீண்டும் மரம் வளரும் தன்மை கொண்டது. இதனால் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் எல்லாம் இந்த தைல மரங்களை பயிர் செய்தனர். இந்த மரம் வளர, வளர இதன் வேர் பல அடிதூரம் கீழே சென்று நிலத்தடி நீரை உறிஞ்சி விடுகிறது. தைலமரம் நாள் ஒன்றுக்கு 8லிட்டர் தண்ணீருக்கு மேல் உறிஞ்சும் தன்மை கொண்டதாகும். இதனால் தைலமரம் பயிர் செய்த இடம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். நீர்மட்டம் குறைந்ததால் கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சுமார் 600அடி முதல் 1000அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து வனத்துறையினர் தைலமரங்களை பயிர் செய்து வந்த தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகளும் தங்கள் விவசாய நிலத்தில் தைலமரங்களை பயிர் செய்ய தொடங்கினர். இதனால் தைலமரங்கள் அதிகளவு நீரை உறிஞ்ச நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் நிலத் தடிநீர் வெகுவாக குறைந்து இப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் கூட வறண்டு போனது. இதனால் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் தட்டுப்பாடால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிகுடங்களுடன் தண்ணீருக்காக அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் தொடர் எதிர்ப்பு

ஆலங்குடி தாலுகா அதிகளவு மரங்கள், விவசாயம் உள்ள பகுதியாகும். இதனால் இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வந்தது. அரசு மற்றும் தனியாருக்கு சொந்த மான நிலங்களில் தைலமரம் மற்றும் கருவேல மரங்கள் பயிர் செய்யப்பட்டன. இந்தவகை மரங்கள் அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் என்பதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதாக விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த வண்ணம் இருந்தனர்.

தொடர் போராட்டங்கள்மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தைலமரங்களை பயிர் செய்து வந்ததால் மாவட் டத்தின் பலபகுதிகளில் நீர்மட்டம் குறைந்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும், சின்டெக்ஸ் டேங்குகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக் கின்றன. இதனால் குடிநீர் கூட கிடைக்காமல் பொதுமக்கள் காலிகுடங்களுடன் அலைந்து வந்ததால் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பல பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசு நடவடிக்கைஆலங்குடி பகுதிகளில் தைலமரம் மற்றும் கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மழை பெய்வதை தடுக்கும் காரணாக உள்ள தைலமரம் மற்றும் கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: