கொம்பாக்கம் ரோட்டில் இன்று மாலை வாகனங்களுக்கு தடை

புதுச்சேரி, பிப். 14:  புதுவை தெற்கு எஸ்பி அப்துல்ரகீம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுச்சேரி கொம்பாக்கம் அலர்மேல்மங்கா சமேத வெங்கடாசலபதி கோயில் 6ம் ஆண்டு திருக்கல்யாண உத்சவ விழா நிகழ்வுகள் இன்று (14ம் தேதி) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கொம்பாக்கம் மெயின் ரோட்டில் நடக்கிறது. இதனால் அந்த நேரத்தில் பஸ், லாரி மற்றும் கார் போன்ற வாகனங்கள் முருங்கப்பாக்கம் சந்திப்பில் இருந்து வில்லியனூர் கோட்டைமேடு பகுதிக்கு இடைப்பட்ட மெயின் ேராட்டில் செல்லாமல் தவளகுப்பம் வழி அல்லது அரும்பார்த்தபுரம் ரோட்டில் செல்லும்படி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்.

Related Stories: