55 கொள்முதல் நிலையங்களில் 26,473 டன் நெல் கொள்முதல்

திருத்துறைப்பூண்டி. பிப்.14: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கடந்தாண்டு 34 ஆயிரம் 840 ஏக்கரில் விவசாயிகள்சம்பா நேரடி விதைப்பும் 2020 ஏக்கரில் நடவு செய்திருந்தனர். மழையில்லாமலும், தண்ணீரில்லாமலும் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி ஓரளவு பயிர்களை வளர்த்துவந்தனர். அதன் பிறகு கஜா புயலால் பாதிக்கப் பட்டனர். கடந்தஜனவரிமாதம் முதல் சம்பா நெல் அறுவடை துவங்கி தற்போது விறுவிறுப்பாகநடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்காக தாலுக்கா முழுவதும் 55 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நேற்றுவரை 55 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் 26 ஆயிரத்து 473 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.விளக்குடி, பள்ளங்கோயில், கீழப்பாண்டி, சுந்தரபுரி, கொக்கலாடி ஆகிய பகுதிகளிலுள்ள திறந்தவெளி சேமிப்பு மையத்தில் பாதுகாப்பிற்காக நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு வருகிறது.

Related Stories: