கோட்டூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

மன்னார்குடி, பிப். 14: ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் கோட்டூர் ஒன்றியத்திலுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் வட்டார வள மையத்தில் நடைபெற்றது.இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பெண்கல்வி மற்றும் சுத்தம் சுகா தாரம் ஆகிய கூறுகளை உள்ளடக்கி ஓவியம் வரைதல், கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் ஒன்றியத்திலுள்ள சுமார் 100 பள்ளிகளை சேர் ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.வட்டார வள மைய மேற் பார்வையாளர் ஜோதி  தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார்  துவக்கி வைத்தார். முன்னதாக ஆசிரியர் பயிற்றுனர் சுப்ரமணியன் வரவேற்றார். போட்டிகள் 1 முதல் 3 ம் வகுப்பு, 4,5 ஆம் வகுப்பு, 6 முதல்  8ம் வகுப்பு வரை  என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது.பேச்சுப் போட்டியில் மாணவர்கள் விவசாயம் நேற்று, இன்று, நாளை, நெகிழி ஒழிப்பு, பெண் கல்வி ஆகிய தலைப்புகளில்   பேசினர். இதன் நடுவராக விக்கிரபாண்டியம் அரசு உயர் நிலைப்பள்ளியின் தலைமை யாசிரியர் முருகையன்,  பாலையக்கோட்டை அரசு  மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் தொல்காப்பியன், ஆசிரியர் பயிற்றுனர் சந்திரசேகரன், முருகேசன் ஆகியோர் பணியாற்றினர்.வட்டார அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகைகள் காசோலையாக வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுனர்கள்  மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் அனிதா நன்றி கூறினார்.

Related Stories: