நிவாரணம் வழங்காத வங்கியை கண்டித்து தில்லைவிளாகத்தில் நாளை மக்கள் உண்ணாவிரதம்

முத்துப்பேட்டை, பிப்:14:  தில்லைவிளாகத்தில் புயல் நிவாரண தொகையை வழங்காத வங்கி நிர்வாகத்தை கண்டித்து நாளை மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சிகளில் ஒன்று. இதில் உள்ள சுமார்50க்கும்மேற்பட்ட கிராமத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலின் கோரதாண்டவத்தில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு அரசின் நிவாரண தொகை தில்லைவிளாகம் கோவிலடி பகுதியில் உள்ள  ஒரு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன்படி நிவாரண தொகையை பெற இப்பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தை எடுக்க வங்கிக்கு சென்ற போது. அந்த நிவாரண தொகையை அவரவரின் விவசாய கடனில் வரவு வைக்கப்பட்டதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கேட்டபோது கண்டிப்பாக கடன் தொகையில் தான் பணத்தை வரவு வைப்போம் என்று வங்கி நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் வங்கி நிர்வாகத்தை கண்டித்து நாளை (15ம்தேதி )காலை 10மணிமுதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் யோகநாதன் தலைமை வகிக்கிறார். இதில்  அனைத்து விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: