கொக்கலாடி ஊராட்சி கிடங்கில் காற்றில் சிதறி கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

திருத்துறைப்பூண்டி, பிப்.14: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திலுள்ள 32 ஊராட்சி களிலுள்ள கிராமங்களில் கொட்டப்படும் குப்பைகளை தெருவாரியாக குப்பைகளை அள்ளிஅந்தந்த பகுதியிலுள்ள ப்பைகிடங்கில் கொட்டப்படுகிறது.பல இடங்களில் குப்பைக்கிடங்கில் பராமரிப்பு இல்லாததால் கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து சாலையிலுள்ள வயல்களில் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதனால் பல்வேறு தொற்றுநோய்கள்அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள்கூறுகையில்: ஊராட்சி பகுதிகளில் முன்பெல்லாம் தினந்தோறும் குப்பைகளை தெருவாரியாக பணியாளர்கள் தினந்தோறும் அள்ளுவது உண்டு. பலஊராட்சிகளில் குப்பைகளை அள்ளுவது கிடையாது. பல ராட்சிகளீல் அள்ளிய குப்பைகளை குப்பைகிடங்கில் தரம் வாரியாகவகைப்படுத்தி பிரித்து கொட்ட வேண்டும். சில ஊராட்சிகளில் இதுபோன்று செய்யாமல் மொத்தமாக குப்பைகிடங்கில் கொட்டுவதால் குப்பைகள் கொட்டிய குப்பைகள் மீண்டும் காற்றில் பறந்து தெருக்களுக்கு வந்து விடுகிறது.கொக்கலாடி ஊராட்சி பாமணிபாலம் அருகில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய கொட்டிய குப்பைகள் சாலைகள் வயல்களில் காற்றில் பறந்து சிதறிக்கிடக்கிறது.எனவேஅனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகளை தினந்தோறும் தெருவாரியாக குப்பைகளை அப்புறப்படுதுவதுடன் குப்பைகிடங்கில் கொட்டிய குப்பைகள் காற்றில் பறக்காமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: