30 கொள்முதல் நிலையங்களுக்கு ஒரு ஒப்பந்தக்காரர் நியமிக்க வேண்டும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

நீடாமங்கலம்,பிப்.14:  மாவட்டம் முழுவதும் 30 கொள்முதல் நிலையங்களுக்கு ஒரு ஒப்பந்தகாரர் நியமிக்க வேண்டும் என சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.நீடாமங்கலத்தில் டி.என்.சி.எஸ்.சி சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது.தமிழகத்தில் சுமார் 6ஆயிரம் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.அதில் திருவாரூர் மாவட்டத்தில் 436 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.இந்த கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பல்வேறு இடங்களில் 25 மூட்டை உயரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு தேங்கியுள்ளது. இதனால் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கே ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது.எடை வைத்து எடுக்கப்படும் நெல் மூட்டைகளை ஏற்றுவதற்கு லாரிக்கு  மாமுல் 1500 ஆக அதிகரித்து உள்ளது.இதனால் நெல் மூட்டைகள் தேங்கி சாட்டேஜ் ஆகி பணியாளர்களுக்கு ரெக்கவரி அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.குறிப்பிட்ட கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய குறிப்பிட்ட ஒப்பந்த காரர்களுக்கு ஒதுக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டு லாரி மாமூல் பாதியாக குறைந்துள்ளது.மற்ற மாவட்டங்களிலும் இதனை அமுல் படுத்த வேண்டும்.பல நாட்கள் நெல் இருப்பு இருந்தாலும் ஒரு கிலோ கூட குறையகூடாது என பகுத்தறிவுக்கு ஒவ்வாத முறையில் கொள்முதல் பணியாளர்களிடம் பல்லாயிரக் கணக்கில் வசூலிக்கப்படுகிறது.சாக்கு தளவாட சாமான்கள் எடுத்துவர பெரும் செலவாகிறது.எனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சாட்டேஜ் இல்லாமல் இருக்க மாவட்டம் முழுவதும் 30 கொள்முதல் நிலையங்களுக்கு ஒரு ஒப்பந்தகாரர் என அரசு அமைத்து தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: