மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக மகளிர் போராட வேண்டும்

கடலூர், பிப். 14: கடலூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் தி.மு.க கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தி.மு.க மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி, மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல் குணசேகரன், தி.மு.க பிரமுகர் விஜயசுந்தரம், தெற்கு ஒன்றிய செயலர் காசிராஜன், நகரச் செயலாளர் ராஜா, பொதுக்குழு சுப்ரமணி, பாலமுருகன், ஒன்றிய பொருளாளர் மணிமாறன், கோவிந்தராஜ், ஞானசேகரன், தனஞ்செயன், மணிகண்டன், ஊராட்சி செயலர்கள் பன்னீர், பாண்டியன், வெங்கடேசன், அய்யாதுரை, சுப்பு, ராஜரத்தினம் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மகளிர் கலந்துகொண்டு 100 நாள் வேலை வழங்கப்படுவதில்லை, சாலை, மின்வசதி, குடிநீர் வசதி இல்லை. ரேஷன் பொருட்கள் வாங்க நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது.

அங்கும் மழை வெயிலில் நீண்ட நேரம் நின்று பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. சாலை விபத்துகளை தடுக்க உரிய இடங்களில் வேகத்தடைகள் வைக்கப்படுவதில்லை. கொசுத்தொல்லை. பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குறைகளை கேட்கவோ தீர்க்கவோ இல்லை என்று ஆதங்கத்தை தெரிவித்தனர்.பின்னர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே ரேஷன் கடைகள் மூலம் ஆயிரம் ரூபாய் கொடுத்து அ.தி.மு.க அரசு மக்களை ஏமாற்றப்பார்க்கிறது. அ.தி.மு.க ஆட்சியின் அவலங்களை மகளிர் துணிச்சலுடன் எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் ஒருங்கிணைந்து இந்த மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட வேண்டும். ஆட்சியரிடம் எடுத்துக்கூறி மக்களின் குறைகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் பாதிரிக்குப்பம் ஊராட்சி மாதிரி ஊராட்சியாக மாற்றப்படும் என்றார்.

Related Stories: