அரசு ஓய்வூதியர் சங்க ஆண்டு விழா

கோவில்பட்டி, பிப். 14: கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர்கள் சங்க 32வது ஆண்டு விழா நடந்தது. சங்க தலைவர்  அய்யலுசாமி தலைமை வகித்தார். துணை தலைவர்கள் ராஜாமணி, அச்சண்ணா ஆகியோர்  முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் ஹரிகரன் வரவேற்றார்.  செயலாளர் கேசவன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ராசையா வரவு -செலவு  அறிக்கை தாக்கல் செய்தார். சிறப்பு விருந்தினராக அகில இந்திய மாநில  அரசு பணியாளர் சம்மேளன தேசியக்குழு  உறுப்பினர் பாலுசாமி கலந்து கொண்டு‘‘ஓய்வூதியர்களும்,  எதிர்கொள்ளும் சவால் களும்’’ என்ற தலைப்பில் பேசினார். கூட்டத்தில் 75, 80  வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள்  சங்க தூத்துக்குடி தலைவர் சங்கரநாராயணன் சால்வை அணிவித்து கவுரவித்தார். அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க  அமைப்பு செயலாளர் சண்முக சுந்தரராஜ், திருச்செந்தூர், நாசரேத், வைகுண்டம் வட்ட தலைவர்கள் சேவியர் லியோனிதாஸ், ஜெயச்சந்திரன்,  வெங்கடாச்சாரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.குறைந்தபட்ச ஓய்வூதியம்  50  சதவீதத்தில் இருந்து 67 சதவீதமாக உயர்த்த வேண்டும். மருத்துவ படியை ரூ.ஆயிரமாக உயர்த்த வேண்டும். தேசிய ஓய்வூதிய கொள்கையை  ஏற்படுத்தி நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய  பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. விழாவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சோழபெருமாள் மற்றும் சங்க  நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: