புவனகிரி நகரில் 15 இடங்களில் 50 கண்காணிப்பு கேமரா

புவனகிரி, பிப். 14: வளர்ந்து வரும் மிக முக்கிய நகரம் புவனகிரி ஆகும்.  இங்கு அடிக்கடி பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து  குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் முக்கிய இடங்களில்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி புவனகிரி வர்த்தகர் சங்கம் மற்றும் சமூக, பொதுநல அமைப்புகளின்  சார்பில் 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. பஸ்  நிலையம், வெள்ளாற்றுப் பாலம், அரசு பள்ளி, வங்கி உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் 50 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்களின்  செயல்பாடுகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று புவனகிரி பாலம் அருகில்  நடந்தது.

விழாவிற்கு முகமதுரபி தலைமை தாங்கினார்.  வர்த்தகர் சங்க நிர்வாகி ரத்தினசுப்பிரமணியன், ரகுராமன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். இலியாஸ்பாஷா வரவேற்றார். விழாவில் கடலூர் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கேமராக்களின்  செயல்பாடுகளை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில்  காவல்துறை அதிகாரிகள், வர்த்தகர்கள், சமூக மற்றும் பொதுநல அமைப்பு  நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: