காரணீஸ்வரர் கோயிலில்ராகு - கேது பெயர்ச்சி பரிகார பூஜை

திருவள்ளூர், பிப். 14: காக்களூர் காரணீஸ்வரர் கோயிலில்,  ராகு - கேது பெயர்ச்சி பரிகார பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.திருவள்ளூர் அடுத்த காக்களூரில் செண்பகவல்லி சமேத காரணீஸ்வரர் கோயில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் மூலவரின் திருமேனியை சித்தர்கள் ஸ்தாபித்து உள்ளனர். ராகு - கேது பரிகாரத் தலமான இங்கு, நேற்று ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பரிகார பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலர் த.எத்திராஜ் தலைமையில் காரணீஸ்வரர் இறைபணி மன்றம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: