துணி கடையின் ஊழியரை திசை திருப்பி ₹1.50 லட்சம் பட்டு புடவைகள் திருட்டு: 4 பெண்களுக் போலீஸ் வலை

சென்னை, பிப். 14: அசோக்நகரை சேர்ந்தவர் கோபால் (44). அதே பகுதி 10வது அவென்யூவில் துணிக்கடை நடத்தி வருகிறார். ேநற்று முன்தினம் மாலை துணிக்கடைக்கு 4 பெண்கள் வந்து, ‘‘திருமணத்திற்கு பட்டுப்புடவை  எடுக்க வேண்டும். விலை உயர்ந்த புடவைகளை எடுத்து கொடுங்கள்’’ என்று கேட்டுள்ளனர். எனவே ஊழியர் ₹10 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் மதிப்பிலான பட்டு புடவைகளை எடுத்து காட்டினார். பின்னர் சிறிது நேரத்தில் ஊழியரிடம், ‘‘நாங்கள் எடுக்க வந்த மாடல் இங்கு இல்லை’’ என கூறிவிட்டு 4 பெண்களும்  சென்றுவிட்டனர். பின்னர் கடை ஊழியர் புடவைகளை மடித்து வைக்கும்போது ₹1.50 லட்சம் மதிப்பிலான 16 பட்டு புடவைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி உரிமையாளர் கோபால் இதுகுறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் கோபால் அளித்த புகாரின்பேரில் போலீசார் விரைந்து வந்து கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 4 பெண்களில் 2 பேர் கடை ஊழியரை திசை திருப்புவதும், மற்ற 2 பெண்கள் 16 பட்டு புடைவைகளை தங்களது சேலைக்குள் மறைத்து வைப்பதும் தெளிவாக பதிவாகி இருந்தது. இதையடுத்து சேலைகளை திருடிய  பெண்களின் புகைப்படங்களை வைத்து 4 பெண்களை தேடி வருகின்றனர்.

Related Stories: