நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்

திருப்பூர், பிப். 13:  திருப்பூரில் நாளை (14ம் தேதி) நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. திருப்பூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை (14ம் தேதி) காலை 10.30 மணி முதல் மாலை 4 வரை நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடக்கிறது. அது சமயம் திருப்பூர் மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். பயிற்சிக்கு வருபவர்கள் தங்களது ஆதார் எண்ணுடன் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0421- 2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி பணியாளர்களுக்கு பயிற்சி

உடுமலை, பிப். 13: கிராம வளர்ச்சி திட்டத்தின்கீழ், ஊராட்சி ஊழியர்களுக்கு பயிற்சி முகாம் மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில் 2 நாட்கள் நடந்தது. இதில் ஊராட்சி செயலர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள், ஊரக கண்காணிப்பளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  இம்முகாமில் வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோர் பேசினர். கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகளின் செயலாக்கம் குறித்து விளக்கப்பட்டது. அடுத்தகட்ட முகாம் வரும் 18, 19ம் தேதிகளில் நடக்கிறது.

Related Stories: