குடிமகன்களால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

திருப்பூர், பிப். 13: திருப்பூர் ஆலங்காடு குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் குடிமகன்கள் மதுபானம் குடித்து விட்டு அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் பாட்டில்களை வீசி செல்வதால் அடைப்பு ஏற்படு

கிறது.

 திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆலங்காவு பகுதியில் இரவு நேரங்களில் ஒதுக்குபுறம்பான பகுதியில் குடிமகன்கள் மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மது குடித்துவிட்டு பாட்டில்களை கழிவுநீர் கால்வாயில் போடுவதோடு தின்பண்டங்களின் கழிவுகளையும் போடுகின்றனர். இதனால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. இதனை அகற்ற முடியாமல் துப்புரவு தொழிலாளர்கள் அவதிப்படுகின்ற

னர்.

  இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது இடத்தில் மது குடிக்கும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து புகைப்பட ஆதாரத்தோடு கலெக்டரிடம் புகார் அளிக்க அப்பகுதி பொது மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: