பல்லடம் மாந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பொங்கலூர், பிப். 13:  பல்லடம் அருகே உள்ள மாந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளிவேலம்பட்டியில் மாந்தீஸ்வரர், வேலாத்தாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மகா கணபதி யாகத்துடன் துவங்கி பல்வேறு ஹோமம் நடத்தப்பட்டு நேற்று விமானத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடந்தது.

 இதில் சுற்றுட்டார 50 கிராம மக்களின் குல தெய்வமாக இக்கோயில் விளங்குகிறது.  கும்பாபிஷேகத்தை அவினாசி-திருக்கொளியூர் ஸ்ரீகருணாம்பிகா சமேத  அவினாசிலிங்கேஸ்வர் ஆலய அர்ச்சகர் சிவக்குமார் சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது.

இக்கோயிலில் அருள்மிகு விசாலாட்சி, பாலமுருகன், வேலாத்தாள், வள்ளியாத்தாள், கன்னிமார், பிரம்மா, ஸ்ரீதேவி, வரதராஜ பெருமாள், கருடாழ்வார், காலபைரவர் உள்ளிட்ட சாமிகளுக்கு விமான கோபுரங்கள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரசனம் செய்தனர். இவ்விழாவில் கோவில் நிர்வாகிகள் விஸ்வநாதன், செந்தில், வேலுச்சாமி, கோவில் நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து

கொண்டனர்.

Related Stories: